இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்

8/14/2017 3:32:39 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18ம் தேதி நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் எழுந்தருளி காவிரித்தாய்க்கு ஆற்றில் சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு ஆடி 18 அன்று பெரிய பெருமாளுக்கு சாத்தப்பட்ட தைலக்காப்பு அகற்றப்படாமல் இருந்ததால், ஆடி 28ம் தேதியான நேற்று மாலை நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். அப்போது மழை லேசாக தூறிக் கொண்டு இருந்ததால் நம்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் இருந்தவாறு வழி நடை உபயங்கள் கண்டருளினார். 11.30க்கு அங்கிருந்து புறப்பட்டு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.  மாலை 4 வரை அங்கு இருந்தவாறு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 4.45 மணிக்கு  பட்டுச்சேலை, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை யானை ஆண்டாள் மீது வைத்து நம்பெருமாள் காவிரி ஆற்றில் விட்டு, காவிரித்தாய்க்கு சீர்வரிசை அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9.30க்கு நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 10.30க்கு மூலஸ்தானம் சென்ற டைந்தார்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]