இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பட்டாபிராம் பகுதியில் வாகன ஆக்கிரமிப்பில் திணறும் சிடிஎச் சாலை: கண்டுகொள்ளாத போலீஸ்

8/14/2017 3:15:53 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

பட்டாபிராம்: ஆவடி அருகே இந்து கல்லூரி பகுதியில் சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கனரக லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுடன் விபத்துகளும் நடைபெறுகிறது. இந்த வாகன ஆக்கிரமிப்பை அப்பகுதி போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். சென்னை-திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வழியாக சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஏராளமான கல்லூரிகளும் நிறுவனங்களும் இயங்கி வருவதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.

வாகன நெரிசல் மிக்க சிடிஎச் சாலையின் பட்டாபிராம், இந்து கலை கல்லூரி அருகே இந்திய உணவு கழக குடோனுக்கு வரும் ஏராளமான லாரிகள் சாலையை ஆக்கிரமித்து, எந்நேரமும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
மேலும், இங்கு மாநகர பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் சிடிஎச் சாலையில் காலை, மாலை நேரங்களில் மிகுந்த வாகன நெரிசலுக்கு இடையே சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதுதவிர, இவ்வழியாக அதிக பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள், சாலையோரமாக வரும் இருசக்கர வாகனங்களையும் பாதசாரிகளையும் உரசியபடி செல்கின்றன. இதனால் இந்து கல்லூரி அருகே ஏராளமான மக்கள் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மோதி உயிர் இழக்கின்றனர்.

குறிப்பாக, ஆவடி-சி.டி.எச் சாலை, சிறப்பு காவல் படை அலுவலகம் அருகே ஒன்றுக்கு மேற்பட்ட டிராபிக் போலீசார் நாள்தோறும் நின்று, அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்களிடம் மாமூல் வசூலிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். பட்டாபிராம் சிடிஎச் சாலை பகுதியில் நிலவும் வாகன ஆக்கிரமிப்புகள் குறித்து இப்பகுதி போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகளிடம் வெகுமதி வாங்கிக்கொண்டு, மக்களின் புகார்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

எனவே, பட்டாபிராம் இந்து கலை கல்லூரி அருகே சிடிஎச் சாலையில் வாகன ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்டு, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]