இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது

8/10/2025 2:33:05 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் ஊத்துக்கோட்டை அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இருந்து  பென்னலூர்பேட்டை வழியாக சொகுசு காரில்  செம்மரக் கட்டைகள் கடத்துவதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சரவணக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பென்னலூர்பேட்டை எஸ்ஐ பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் காசிரெட்டிபேட்டை கிராம எல்லையில் உள்ள சுடுகாடு பகுதியில் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும்படி முன்னால் வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் வந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே, போலீசாரை பார்த்ததும் பின்னால் சொகுசு காரில் வந்தவர்கள் காரை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த காரை பரிசோதனை செய்தபோது, அதில் ஒரு டன் எடை கொண்ட 39 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த  ராஜேஷ் (30) என்பதும் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வதற்கு பாதுகாப்பு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷிடம், செம்மரக்கட்டைகள் யாருக்கு கடத்தி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • விசைத்தறி கடன் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை



  • திருச்சியில் பயங்கரம்: பிளஸ் 2 மாணவன் குத்திக்கொலை



  • மீஞ்சூர் அருகே வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை: ரூ.40 ஆயிரம் அபேஸ்



  • புழல் அருகே பெண்ணை தள்ளிவிட்டு செயின் பறிப்பு



  • பொன்னேரி அருகே பள்ளி மாணவியிடம் செயின் பறிப்பு



  • சுதந்திர தின விழாவிற்கு சென்று வீடு திரும்புகையில் கத்தி முனையில் பள்ளி மாணவி பலாத்காரம்



  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]