சிற்பத்தால் சிரமம்
8/9/2025 3:02:23 PM
நாகர்கோவில் நகரின் மைய பகுதியான வடசேரி எம்ஜிஆர் சிைல அருகில், அதிமுகவினர் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அமைத்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்கு முக்காடுகிறது. மணல் சிற்பம் காரணமாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் காலை மற்றும் மாைல வேளையில் வாகனங்களில் செல்கின்றவர்கள் படாதபாடு படுகின்றனர்.
இதே போல் சென்னை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற பஸ் மற்றும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஆகவே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஜெயலலிதா மணல் சிற்பத்தை உடனே அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். சுமார் 7 மாதங்களை கடந்த போதிலும் இன்று வரை இந்த கோரிக்கைக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.