ஓடையான அமராவதி
8/9/2025 2:58:47 PM
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து ஆண்டுதோறும் அமராவதி ஆற்றில் கரூர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தாண்டு போதிய மழையின்மையால், அணை நிரம்பவில்லை. தண்ணீரும் திறந்து விடப்படவில்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த மாதம் அமராவதி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், தண்ணீர் கரூர் மாவட்டத்துக்கு வரவில்லை. ஆத்திரமடைந்த அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அமராவதியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் வரை வந்தது. இதனால், ஆடிப்பெருக்கை காவிரி ஆற்றுக்கு பதிலாக அமராவதியில் கொண்டாடி பொதுமக்கள் மகிழ்ந்தனர். சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்த நிலையில், தற்போது, சிறிய ஓடையாக மாறிவிட்டது. அமராவதி ஆற்றில் கடந்த 2005ம் ஆண்டு வந்த வெள்ளத்தால் புதிய பாலமே உடைந்தது. அதற்கு பிறகு ஆற்றில் வெள்ளமே வரவில்லை.ஆயிரக்கணக்கான அமராவதி பாசன விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.