அறிவியல் இயக்க மாநாடு
7/31/2017 3:10:11 PM
செங்கல்பட்டு: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு, செங்கல்பட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் வீரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன், மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட கவுரவ தலைவர் ஜனார்த்தனன், லிட்டில் ஜாக்கி மெட்ரிக் பள்ளி நிறுவனர் சாம்டேனி, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்ற தலைவர் ராஜி, சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிடல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தல், ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.