இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிறந்த நடிகர்-நடிகை-படங்களுக்கு 6 ஆண்டுக்கான சினிமா விருது அரசு அறிவிப்பு

7/14/2017 3:46:18 PM
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வகுப்புவாத பதற்றத்தை அனுமதிக்க முடியாது: மோடி எச்சரிக்கை என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது

சென்னை: 6 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் திரையுலகிற்கான மாநில அரசு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ் திரையுலகிற்கான விருதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை நேற்று ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு சிறந்த படம் முதல் பரிசு பசங்க. 2வது பரிசு மாயாண்டி குடும்பத்தார். 3வது பரிசு அச்சமுண்டு அச்சமுண்டு. சிறந்த நடிகர் கரண் (மலையன்). சிறந்த நடிகை பத்மப்ரியா (பொக்கிஷம்). இயக்குனர் வசந்தபாலன் (அங்காடிதெரு). இசை சுந்தர்.சி.பாபு (நாடோடிகள்). 2010 ஆண்டு சிறந்த படம் முதல்பரிசு மைனா. 2வது பரிசு களவாணி. 3வதுபரிசு புத்ரன். சிறந்த நடிகர் விக்ரம் (ராவணன்), சிறந்த நடிகை அமலாபால் (மைனா). இயக்குனர் பிரபுசாலமன் (மைனா). இசை யுவன் சங்கர் ராஜா (மைனா).

2011ம் ஆண்டு சிறந்த படம் முதல்பரிசு வாகை சூடவா. 2வதுபரிசு தெய்வத் திருமகள். 3வது பரிசு உச்சிதனை முகர்ந்தவன். சிறப்பு பரிசு மெரினா.  நடிகர் விமல் (வாகை சூடவா). நடிகை இனியா (வாகை சூடவா). இயக்குனர் விஜய் (தெய்வத் திருமகள்). இசை ஹாரிஸ் ஜெயராஜ் (கோ). 2012 சிறந்த படம் முதல் பரிசு வழக்கு எண் 18/9. 2வது பரிசு சாட்டை, 3 வது பரிசு தோனி.  சிறப்பு பரிசு கும்கி. நடிகர் ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்). நடிகை லட்சுமி மேனன் (கும்கி). இயக்குனர் பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9). இசை இமான் (கும்கி). 2013ம் ஆண்டு சிறந்த படம் முதல் பரிசு ராமானுஜன். 2வது பரிசு தங்க மீன்கள். 3வதுபரிசு பண்ணையாரும் பத்மினியும். சிறப்பு பரிசு ஆள். நடிகர் ஆர்யா. நடிகை நயன்தாரா (ராஜா ராணி).  இயக்குனர் ராம் (தங்கமீன்கள்). இசை ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்).

2014 சிறந்த படம் முதல் பரிசு குற்றம் கடிதல். 2வது பரிசு கோலிசோடா. 3வது பரிசு நிமிர்ந்து நில். சிறப்பு பரிசு காக்கா முட்டை. நடிகர் சித்தார்த் (காவிய தலைவன்), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை). இயக்குனர் ராகவன் (மஞ்சப்பை). இசை ஏ.ஆர்.ரகுமான் (காவிய தலைவன்). மேற்குறிப்பிட்டவை தவிர பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். சிறந்த படத்துக்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம். 2ம் பரிசு ரூ. 1 லட்சம். 3ம் பரிசு ரூ. 75 ஆயிரம். சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 5 பவுன் தங்க பதக்கம். நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. மகளிர் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கு சிறப்பு பரிசாக 1.25 லட்சம் ரொக்கம், நினைவுபரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில
  • கல்லூரி மாணவி கடத்தல்? பொன்னேரி அருகே பரபரப்பு



  • தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது



  • கடன் தொல்லையால் விரக்தி: 2 மகன்கள் கிணற்றில் தள்ளி கொலை



  • பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்து ஒருவர் பலி: ராணுவ வீரர்கள் விற்றது அம்பலம்



  • பசு பாதுகாப்பு என்ற பெயரால் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்



  • ஓட்டல்களில் திறந்தவெளியில் வைத்து சிலிண்டர் பயன்படுத்துவதால் ஆபத்து



  • நடிகை பாவனா கடத்தல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரிடம் போலீஸ் விசாரணை



  • திமுக பிரமுகர் பிறந்தநாள் ஆர்.எஸ்.பாரதி, கி.வேணு வாழ்த்து



  • ஊத்துக்கோட்டையில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த லாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]