இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுக்க கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் : முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

7/10/2025 3:38:32 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி : தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை தடுக்க கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியை அடுத்த குர்கானில் நடைபெற்ற விழாவில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராமதாஸ் அதுவாலே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், உத்தரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டுமானால் கலப்பு திருமணங்களை அரசுகள் ஆதரிக்க வேண்டும். எனவே கலப்பு மணங்களை ஊக்குவிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். மேலும் கலப்பு மணத்தை ஊக்குவிக்கும் திட்டத்திற்காக ஒவ்வொரு மாநில அரசும் தங்களது பட்ஜெட்டில் இருந்து ரூ.25 கோடியை மாவட்ட நிர்வகாத்திற்கு ஒதுக்க வேண்டும். கலப்பு மண ஜோடிகளுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை, இருவரில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும். இதன் மூலம் சாதிகள் மத்தியில் இருக்கும் பிளவு படிப்படியாக குறையும் என்றார்.

கலப்பு மணங்களை ஊக்குவிக்க மத்திய அரசு தற்போது ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. மாநிலங்கள் தங்களது வசதிக்கேற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கி வருகின்றன. மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுவது குறித்து பேசுகையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்ட விரோத கும்பல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது இது போன்ற கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்கள் பசு பாதுகாவலர்கள் அல்ல, கொலைகாரர்கள். சட்டம் ஒழுங்கு மீறப்படும் போது யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பு கும்பல் என்ற பெயரில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் சில
  • காஷ்மீர் பிரச்னைகளுக்கு காந்தி குடும்பம் தான் காரணம் : ராகுல் காந்திக்கு பாஜ பதிலடி



  • ‘ஜனாதிபதியாக’ பிரணாப் சொந்த ஊருக்கு கடைசி பயணம்



  • பாவனாவுக்கு தந்ததுபோல் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது : திலீப் மீது நவ்யா நாயர் கடும் தாக்கு



  • பாவனா கடத்தல் வழக்கு காங்கிரஸ் எம்எல்ஏ சிக்குகிறார் : தனிப்படை போலீஸ் தீவிரம்



  • ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை



  • துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு நிதிஷ்குமார் ஆதரவு



  • பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப் வங்கி கணக்கு முடக்கம்? : கோடிக்கணக்கில் கறுப்புப்பணம் பதுக்கல் அம்பலம்



  • லாலு வெளியேறினால் நிதிஷ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: பாஜ அறிவிப்பு



  • ஜீப்பில் மனித கேடயமாக கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : காஷ்மீர் மனித உரிமை கமிஷன் உத்தரவு ஏற்புடையதல்ல



  • ரூ.9000 கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கிய மல்லையாவை ஆஜர்படுத்தாதது ஏன்?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]