இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து : 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

7/10/2025 3:30:06 PM
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் ரத்து

லண்டன் : இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் புகழ் பெற்ற மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இங்கிலாந்தில் உள்ள லண்டன் மிகப் பெரிய நகராகும். இங்கு உலகப் புகழ் பெற்ற பல்வேறு வர்த்தக பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1000க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் என இந்த மார்க்கெட் இரவு பகல் என எந்த நேரமும் பிசியாக செயல்படும் பகுதியாகும். இந்த சூழலில் நேற்று நள்ளிரவு யாரும் எதிர்பாராத வகையில் மார்க்கெட் பகுதியில் உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ பிடித்தது. பயங்கரமான காற்று காரணமாக தீ வேகமாக அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. உடடினயாக தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் 10 வாகனங்களில் சுமார் 70 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலைக்குள் அனைத்து தீயும் முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதால் மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் மேற்கு லண்டனில் கிரென்பெல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் அடுத்தடுத்து நடந்து தீ விபத்து சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • 30 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயல்: வீடுகள், சாலைகள் சேதம், புயலுக்கு 24 பேர் பலி



  • எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை



  • மியான்மர் அதிபர் ஹதின் கியாவுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு



  • அந்தமானில் இன்று நிலநடுக்கம்



  • டெக்சாஸ் புயலில் சிக்கிய இந்திய மாணவி சாவு



  • ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிரொலி ஐ.நா சபை இன்று அவசரமாக கூடுகிறது: வடகொரியாவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு



  • இந்தியாவில் காச நோய்க்கு 2 ஆண்டுகளில் 55 ஆயிரம் குழந்தைகள் பலி



  • போரில் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு இந்தியா உதவ வேண்டும்: ட்ரம்ப்



  • பார்சிலோனாவில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: அமைச்சர் சுஷ்மா தகவல்



  • அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீதான தாக்குதல் நிறுத்தி வைப்பு: வடகொரியாவுக்கு டிரம்ப் பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]