இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அரசுடன் உறவை வலுப்படுத்த அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் மோடி ஆலோசனை

7/10/2025 3:22:22 PM
ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வெள்ளை மாளிகை தலைமை ெபாறுப்புக்கு இந்திய பெண் தேர்வு

புதுடெல்லி : மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மாநாடு இன்று காலை விஞ்ஞாபவனில்  நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கி மாலை வரை பிரதமர் மோடி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் மோடி ஆலோசிக்கிறார். இந்த மாநாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை, ஜிஎஸ்டி அமல்படுத்தியது தொடர்பான தாக்கங்கள், மானிய விவகாரம், விவசாயம், ஊட்டச்சத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்குவிப்பது, மின்சார பயன்பாடு அதிகரிப்பு, பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளுக்கு உள்ள முட்டுக்கட்டைகள் குறித்த குறைகளையும் கேட்டறிகிறார். இதையடுத்து மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையொட்டி மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களில் அமல்படுத்துவதை விரைவுபடுத்தும் வகையில் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக நிதி கமிஷனின் பரிந்துரையின் படி, மாநிலங்களின்  நிதி நிலவரம் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேவ்ராய் அறிக்கை தாக்கல் செய்தார். இதையொட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த பின் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாநில தலைமை செயலாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மாநிலங்கள், மந்தமாக செயல்பட்ட மாநில அரசுகள் குறித்த தர வரிசை அறிக்கையை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த விவாதமும் நடைபெறும் என தெரிகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் தலைமை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்து கொண்டார். மேலும் மத்திய அரசின் நிதி மற்றும் உள்துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை



  • துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு நிதிஷ்குமார் ஆதரவு



  • பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப் வங்கி கணக்கு முடக்கம்? : கோடிக்கணக்கில் கறுப்புப்பணம் பதுக்கல் அம்பலம்



  • லாலு வெளியேறினால் நிதிஷ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: பாஜ அறிவிப்பு



  • ஜீப்பில் மனித கேடயமாக கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : காஷ்மீர் மனித உரிமை கமிஷன் உத்தரவு ஏற்புடையதல்ல



  • ரூ.9000 கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கிய மல்லையாவை ஆஜர்படுத்தாதது ஏன்?



  • பாவனா கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப்பை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு



  • நைஜீரியா வாலிபருக்கு போலி பாஸ்போர்ட் உளவுப்பிரிவு தலைமை காவலர் கைது : இன்ஸ்பெக்டர் தொடர்பு குறித்து விசாரணை



  • அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை



  • துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை : நிதிஷ்குமார் புறக்கணிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]