இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

7/9/2025 2:14:06 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த வருகிற 11ம் தேதி டெல்லி வரும்படி எதிர்கட்சி தலைவர்களுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவதையொட்டி வருகிற 17ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 20ம் தேதி வெளியாகும். இந்த சூழலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 4ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி கட்சிகள் சார்பில் பீகார் கவர்னர் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியில் உள்ளன. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் மற்றும் எதிர்கட்சி தரப்பு வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் கடந்த வாரம் முழுவதும் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் இருந்தார். இன்று டெல்லி திரும்பியுள்ளார். எனவே அவரது வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு இன்று அல்லது நாளை பாஜ உயர்மட்ட குழு கூடி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கும் என தெரிகிறது. அதே போல் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன. இதற்காக வருகிற 11ம் தேதி எதிர்கட்சி தலைவர்களை சோனியா டெல்லிக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ராகுல், சிபிஎம்  பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், என்சிபி தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் அணியில் இருந்து நிதிஷ் தலைமையிலான ஜேடியூ வெளியேறியுள்ளது. இருந்த போதிலும் நிதிஷ் தரப்பில்  இருந்து மூத்த தலைவர் ஒருவர் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் சில
  • ‘ஜனாதிபதியாக’ பிரணாப் சொந்த ஊருக்கு கடைசி பயணம்



  • பாவனாவுக்கு தந்ததுபோல் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது : திலீப் மீது நவ்யா நாயர் கடும் தாக்கு



  • பாவனா கடத்தல் வழக்கு காங்கிரஸ் எம்எல்ஏ சிக்குகிறார் : தனிப்படை போலீஸ் தீவிரம்



  • ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை



  • துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு நிதிஷ்குமார் ஆதரவு



  • பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப் வங்கி கணக்கு முடக்கம்? : கோடிக்கணக்கில் கறுப்புப்பணம் பதுக்கல் அம்பலம்



  • லாலு வெளியேறினால் நிதிஷ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: பாஜ அறிவிப்பு



  • ஜீப்பில் மனித கேடயமாக கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : காஷ்மீர் மனித உரிமை கமிஷன் உத்தரவு ஏற்புடையதல்ல



  • ரூ.9000 கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கிய மல்லையாவை ஆஜர்படுத்தாதது ஏன்?



  • பாவனா கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப்பை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]