இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாமில் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு

7/6/2025 3:56:04 PM
அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கவுகாத்தி: அசாமில் கனமழைக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அசாம் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இங்குள்ள லட்சுமிபூர், ஜோர்கத், கோலாகட், சோனிட்பூர், நாகோன் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கனமழையால் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் மாநில அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 128 முகாம்கள் அமைக்கப்பட்டு, அவைகளில் 41,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. முக்கிய நதியான பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிப்போர் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்



  • பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை



  • கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் இல்லை: அன்னா ஹசாரே பேச்சு



  • சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி: பொருளாதார மாநாட்டில் நாளை மறுதினம் பங்கேற்பு



  • எல்ஐசி பாலிசிக்கும் ஆதார் கட்டாயம் : மத்திய அரசு கெடுபிடி



  • பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களின் புகைப்பட அருங்காட்சியகம் : அமைச்சர் தகவல்



  • 2017ம் ஆண்டில் 213 தீவிரவாதிகள் கொலை : காஷ்மீர் முதல்வர் மெகபூபா தகவல்



  • கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு



  • வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : ரயில் சேவை பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]