இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் காதலர்களின் ‘லேட்டஸ்ட் க்ரஷ்’ மந்தனா...

7/4/2025 3:19:06 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கிரிக்கெட் விளையாட்டை மதம் போன்றும், கிரிக்கெட் வீரர்களை கடவுளுக்கு நிகராகவும் கருதும் ரசிகர்களை கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் மெல்ல மெல்ல முக்கியத்துவம் பெற்று வருகிறது. அண்மையில் நடந்த ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் ஐசிசி மகளிர் உலக கோப்பையின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் மகளிர் உலக கோப்பையில் இந்திய அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செயல்படுகிறது. குறிப்பாக ஒரு வீராங்கனை தனது அழகான லுக், ஸ்மைல், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நம்பிக்கை, திறமை ஆகியவற்றின் மூலம் இந்திய கிரிக்கெட் காதலர்களின் புதிய ‘க்ரஷ்’ ஆக உருவெடுத்துள்ளார். இந்திய அணியின் இடது கை தொடக்க வீரராங்கனை ஸ்மிருதி மந்தனாதான் அவர். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் முறையே 90, 106 ரன்களை குவித்து இந்தியா வெற்றி பெற உதவியதால் பத்திரிகை செய்திகளில் அதிகம் இடம் பிடித்தார்.

இந்த 2 போட்டிகளிலும் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதுடன் சேர்த்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளார். நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 1996ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்தார் மந்தனா. தந்தை  னிவாஸ். தாய் ஸ்மிதா. 2 வயது நிறைவடைந்திருந்தபோது அவரது குடும்பம் சாங்லி நகருக்கு இடம் பெயர்ந்தது. தந்தை னிவாஸ், சகோதரர் ஷர்வன்  இருவரும் சாங்லி மாவட்ட அளவில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள். சகோதரர் ஷர்வன் மகாராஷ்டிரா மாநில யு-16 (16 வயதுக்குட்பட்டோருக்கான) டோர்னமெண்ட்டுகளில் விளையாடியதை பார்த்து கிரிக்கெட் மீது மந்தனாவுக்கு ஈர்ப்பு வந்தது. இதன் மூலம் வெறும் 9 வயதில் மகாராஷ்டிரா யு-15 அணிக்கும், 11 வயதில் மகாராஷ்டிரா யு-19 அணிக்கும் தேர்வானார். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை கடந்த 2013ம் ஆண்டு மந்தனா படைத்தார். மேற்கு மண்டல அணிக்காக யு-19 போட்டி ஒன்றில் 150 பந்துகளில் 224 ரன்களை அவர் குவித்தார். அதே ஆண்டில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய தேசிய அணிக்காக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது வெறும் 16 மட்டுமே. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய தேசிய அணியில் 2014ம் ஆண்டு மந்தனாவுக்கு இடம் கிடைத்தது.
 
2016ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் அணியில் இடம் பிடித்த ஒரே இந்திய வீராங்கனை மந்தனா மட்டுமே. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹூட் அணிக்காக ஓராண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஹர்மான்பிரீத் கவுருக்கு பிறகு பிக் பாஷ் லீக் தொடருக்கு ஒப்பந்தம் ஆன 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். அவரது தோழிகள் கேரியர் என்னவாக இருக்க வேண்டும் என யோசித்து கொண்டிருக்கும் வயதில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்வுமனாக உருவெடுத்துள்ளார் மந்தனா. சகோதரர் ஷர்வன் இன்னமும் கூட வலை பயிற்சியில் மந்தனாவுக்கு பந்து வீசி கொண்டிருக்கிறார். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மந்தனாதான். பாலிவுட் நடிகைகளுக்கு சரி நிகராக மந்தனா மீதான ‘க்ரஷ்-ஐ’ வெளிப்படுத்தும் மீம்ஸ்கள் கொடி கட்டி பறக்கின்றன. மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பதற்கு மந்தனாவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. இன்னும் சில தினங்களில் பிறந்த நாள் காண இருக்கும் மந்தனாவின் தற்போதைய இலக்கு மகளிர் உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவ வேண்டும் என்பதுதான். பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மந்தனா இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தாலும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என நம்பலாம்.

மேலும் சில
  • கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை



  • பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி



  • தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை



  • தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை



  • எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து



  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]