இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

7/4/2025 3:18:02 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பெரம்பலூர்: பெரம்பலூர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (25).  கடந்த 28ம் தேதி இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ச் பகுதியில் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.  அருகில் பைக் கிடந்தது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மணிகண்டன்,  2015ம் ஆண்டு அரசு பஸ் டிரைவர் வேலுசாமி என்பவர் கொலை வழக்கில் குற்றவாளி என்பதும் அவர் விபத்தில் இறக்கவில்லை. இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு விபத்து போல நாடகமாடி அங்கு வீசப்பட்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. வழக்கை கொலை வழக்காக மாற்றி பெரம்பலூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அரணாரை கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்தேசம் திரைப்படம் மற்றும் குறும்பட இயக்குனருமான செல்வராஜ் என்ற அப்துல்ரகுமான்(42) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சதீஷ்குமார்(28) மற்றும் வேல்முருகன்(47) ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: அரசு பஸ் டிரைவர் வேலுசாமி கொல்லப்பட்ட வழக்கில் மணிகண்டனும், சினிமா டைரக்டர் செல்வராஜூம் குற்றவாளிகள். வழக்கினை சுமூகமாக பேசி முடிக்கலாம் என வேலுசாமி மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மணிகண்டனிடம் செல்வராஜ் கூறினார். இதற்கு மணிகண்டன் மறுத்து விட்டார். இதனால் அவர் மீது இவர்களுக்கு பகை உண்டானது. இந்நிலையில் மணிகண்டன், செல்வராஜ் பெயரை கூறி சிலரிடம் பணமும் வாங்கி இருந்தாராம். ஆத்திரமடைந்த டைரக்டர் செல்வராஜ் தனது நண்பர்கள் சதீஷ்குமார், வேல்முருகன் ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கடந்த 28ம் தேதி இரவு தீரன் நகர் ஆர்ச் அருகே  அழைத்து வந்தனர். அப்போது அனைவரும் மது அருந்தினர். அப்போது கொலைவழக்கில் சமாதானம் பேசி முடிக்கவும், பணத்தை திருப்பி தரவும் மணிகண்டன் ஒத்துவரவில்லை. இதனால் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார். அவர் பிழைக்கமாட்டார் என்பதை அறிந்து விபத்து போல நாடகமாட திட்டமிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை ரோட்டோரம் வீசிவிட்டு அவர் மேல் பைக்கையும் போட்டு விட்டு சென்றுவிட்டனர். பைக் விபத்தில் காயமடைந்தவர் போல ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் சில
  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 7 வீடுகளில் கொள்ளை : அச்சத்தில் பொதுமக்கள்



  • சென்னை ஏட்டு முருகன் கைது எதிரொலி தமிழகம் முழுவதும் உளவுபிரிவு போலீசாரை மாற்ற உத்தரவு



  • வளசரவாக்கத்தில் இருந்து முதல் கணவரால் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் சேலத்தில் மீட்பு



  • கள்ளக்காதலை கண்டித்த கணவன் கொன்று புதைப்பு : மனைவி கைது; காதலனுக்கு வலை



  • அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய நெல்லை தாசில்தார் கைது



  • தலைநகர் டெல்லியில் ஒரே வாரத்தில் 3 பாலியல் பலாத்கார சம்பவம்



  • மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணுடன் உல்லாசம் தடகள வீரர் பரபரப்பு வாக்குமூலம் : பல பெண்களுடன் தொடர்பா?



  • தம்பதியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை



  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]