இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம், புதுவை, கேரளா எம்பி, எம்எல்ஏக்களிடம் ராம்நாத் கோவிந்த் சென்னையில் ஆதரவு திரட்டினார் : மீராகுமார் மாலையில் சந்திக்கிறார்

7/1/2025 3:34:14 PM
வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியர்கள் இணைய வேண்டும்: பக்ரைனில் ராகுல்காந்தி பேச்சு தமிழக கவர்னர் டெல்லியில் முகாம் மோடியை இன்று மாலை சந்திக்கிறார்

சென்னை : பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை வந்தார். தமிழகம், புதுவை, கேரளா எம்பி, எல்எல்ஏக்களிடம் அவர் ஆதரவு திரட்டினார். அதேபோல, எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை கூட்டணிக் கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜ சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் நாடாளுன்ற மக்களை முன்னாள் தலைவர் மீராகுமார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து ராம்நாத், மீராகுமார் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ராம்நாத் மற்றும் மீராகுமார் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். ராம்நாத்துக்கு தமிழகத்தில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு கேட்பதற்காக பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் மத்திய மந்திரிகள் ஜெ.பி.நட்டா, பாஜ தேசிய செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோர் உடன் வந்தனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள ஓட்டலுக்குச் சென்றார். அங்கு பிற்பகல் 12.30 மணிக்கு ராம்நாத் புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, கேரளா எம்பி ராஜகோபாலையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். மாலை 3.30 மணிக்கு சென்னை, ஆழ்வார்ப்பேட்டை அருகே கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கம் செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கிறார். இதையடுத்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

எதிர்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை 5 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்று அழைத்து செல்கின்றனர்.இரவு 7 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். பின்னர் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இரவு 8 மணிக்கு மீராகுமார் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார்.


மேலும் சில
  • தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் யார் கொண்டு வந்தாலும் ஆதரவு: திவாகரன் பேட்டி



  • நாடு முழுவதும் பாஜ வெற்றி பெறும் : மோடியின் சகோதரர் நம்பிக்கை



  • 10, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு பிப்.1ல் துவக்கம்



  • தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு ரூ.60 ஆயிரம் மின் கட்டணம் விசாரணை ஆணையத்தின் மின் இணைப்பு திடீரென துண்டிப்பு



  • தமிழக கவர்னர் டெல்லியில் முகாம் மோடியை இன்று மாலை சந்திக்கிறார்



  • டிடிவி.தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு



  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள் மழைக்கு வாய்ப்பு: 55 கி.மீ வேகத்தில் கடற்காற்று வீசும்



  • ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்: நீதிபதி துருவி துருவி விசாரணை



  • 6வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்குவதில் சிக்கல்: பண்டிகை முன்பதிவு 40 ஆயிரமாக சரிந்தது



  • ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி : ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]