இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் அப்சல் குரு சர்ச்சைக்கு பிறகு மாயமான மாணவர் நஜீப் குறித்து தகவல் அளிப்பவருக்கு B10 லட்சம் சன்மானம் : சிபிஐ அறிவிப்பு

6/30/2017 3:44:08 PM
வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியர்கள் இணைய வேண்டும்: பக்ரைனில் ராகுல்காந்தி பேச்சு தமிழக கவர்னர் டெல்லியில் முகாம் மோடியை இன்று மாலை சந்திக்கிறார்

புதுடெல்லி : டெல்லியில் கடந்த ஆண்டு அப்சல் குரு சர்ச்சைக்கு பிறகு மாயமான ஜேஎன்யூ பல்கலை மாணவர் நஜீப் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு கடந்த 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இந்த சூழலில் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலை கழகத்தில் மாணவர்கள் சிலர் அப்சல் குரு நினைவு தினத்தை அனுசரித்தனர். அப்போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கன்யா குமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் ஜேஎன்யூ மாணவர் நஜீப்  அகமது கடந்த ஆண்டு அக்டோபரில் திடீரென மாயமானார். அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.

இதையடுத்து தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவரது பெற்றோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து எங்கு தேடியும் நஜீப் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் நஜீப் விவகாரத்தில் டெல்லி போலீசார் மெத்தனம் காட்டுவதாக கூறி நஜீப்பின் பெற்றோர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினர். இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த சூழலில் நஜீப் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும் சில
  • முத்தலாக் தடை மசோதாவுக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் ஆதரவு: மத்திய அமைச்சர் அப்பாஸ் பேட்டி



  • புதிய 10 ரூபாய் நோட்டில் ஒடிசா கோயில் சின்னம்: முதல்வர் நவீன் பட்நாயக் மகிழ்ச்சி



  • தியேட்டர்களில் தேசிய கீதம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு: மத்திய அரசு தாக்கல்



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் இடையே கடும் சண்டை



  • ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுதலை: சிபிஐக்கு பின்னடைவு



  • ஆதார் தகவல்கள் கசிந்த விவகாரம் பத்திரிகையாளர் மீது வழக்கு இல்லை: மத்திய அமைச்சர் அறிவிப்பு



  • கேரளாவில் பரபரப்பு பீப்பாவுக்குள் இளம்பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை



  • நுழைவு வாயிற்கதவை பூட்டிபுதுவை சட்டசபை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா: இலவச பொருட்கள் வழங்காததால் ஆவேசம்



  • பாக். சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 147 பேர் விடுதலை



  • காங். தலைவர் கையை வெட்டுவோம் ம.பி. பாஜ பிரமுகர் சர்ச்சை பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]