இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம்

6/30/2017 3:35:27 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

கோவில்பட்டி : ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பகுதிநேர இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதில் பகுதிநேர இயந்திரம் மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் இயங்கும் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பகுதிநேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனத் தலைவர் ராஜவேல், துணை தலைவர் ராஜ் முன்னிலை வகித்தனர். பகுதிநேர இயந்திர தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை(1ம் தேதி) முதல் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அடைத்து காலவரையற்ற போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வருகிற ஜூலை 3ம் தேதி மாலை 3 மணிக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது, 4ம் தேதி முதல் மத்திய கலால் வரி அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தினமும் 500 பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் வருகிற 10ம் தேதி கோவில்பட்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]