இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் டிஜிபி ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு

6/30/2017 3:13:47 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

சென்னை : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று மாலையுடன் ஓய்வுெபறும் நிலையில் அவருக்கு தமிழக அரசு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. புதிய டிஜிபியாக யார் வருவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் டிஜிபி அலுவலகத்தில் இருந்து டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், தமிழக பிரிவில் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், சிவில் சப்ளை டிஜிபி ராதாகிருஷ்ணன், காவலர் பயிற்சி பள்ளி இயக்குநர் மகேந்திரன், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஜாங்கிட், சட்டம் ஒழுங்கு திரிபாதி ஆகியோர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தேர்வாணையம் நேற்று அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.கே.ராஜேந்திரனை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து, 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்குவதற்கான உத்தரவுடன் மும்பை சென்றார். இன்று காலை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து அவரிடம் முறைப்படி பணி நீட்டிப்புக்கான அனுமதி பெற்றார்.

அதை தொடர்ந்து டி.கே.ராஜேந்திரனை இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற விதிப்படி, மாநில அரசின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் 2 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், தமிழக அரசு ஒரு சிறப்பு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் படி, டிஜிபியாக ஓய்வு பெறும் நாளில் ராமானுஜத்துக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து அசோக் குமார் அந்த சிறப்பு உத்தரவின்படி 2 ஆண்டுகள் பணி அமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசு வற்புறுத்தலின்பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அசோக்குமார் விருப்ப ஓய்வு பெற்று சென்றார்.

அதைதொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி.கே.ராஜேந்திரன் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் பொறுப்பை கவனித்து வந்தார். இந்த நிலையில், அவர் இன்று ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு புதிய டிஜிபியாக பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா விவகாரம் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]