இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது

6/29/2017 3:35:58 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

ஆவடி : ஆவடியை அடுத்த பட்டாபிராம், சத்திரம், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (55). இவர், இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஆவடி டேங்க் பேக்டரியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மினி (48). இவர் ஆவடியில் உள்ள விமான படைக்கு சொந்தமான பள்ளி ஆசிரியர். இவர்களது ஒரே மகள் சினேகா (26). எம்.காம் பட்டதாரி. இவருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி காலை பெற்றோர் வேலைக்கு கிளம்பி சென்றதும் வீட்டில் தனது பாட்டி விஜயலட்சுமியுடன் சினேகா இருந்துள்ளார். அப்போது ஒரு காரில் வந்த மர்மக் கும்பல், பாட்டி விஜயலட்சுமியை கயிற்றால் கட்டி போட்டனர். பின்னர் சினேகாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து பட்டாபிராம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், சினேகாவும் பட்டாபிராம், பாரதி நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான சாதிக்பாட்சா (38) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததும், சாதிக்பாட்சாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது தெரிந்ததும் சினேகா காதலை முறித்து கொண்டுள்ளார்.

இதையடுத்து சினேகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை கேள்விப்பட்டதும் சாதிக்பாட்சா காரில் கடத்தி சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து சினேகாவை காரில் கடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆந்திர மாநிலம், நெல்லூரில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சினேகாவை தனிப்படை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக சாதிக்பாட்சா என்பவரை கைது செய்து, அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாதிக்பாட்சாவின் கடத்தலுக்கு உதவிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சாதிக்பாட்சாவின் கடத்தலுக்கு உதவியாக இருந்து தலைமறைவான ஆந்திர மாநிலம், நெல்லூர், சென்னாரெட்டி பாளையத்தை சேர்ந்த ஏசய்யா (25), ரமேஷ் (28), ரவிக்குமார் (32) ஆகிய 3 பேரையும் நேற்று மாலை பட்டாபிராம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு திருவள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]