இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு

6/28/2017 3:47:36 PM
நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த வளத்தோடு கிராமத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் தரிசு நிலம் (கிராம நத்தம்) உள்ளது. இந்த நிலத்தை கோயில் கட்டுவதற்காக பொதுமக்கள் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். கோயில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் அந்த நிலத்தில் புற்கள், செடி, கொடி வளர்ந்து பயன்பாடற்று காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சிலர், ‘இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது’ என்று கூறி ஜேசிபி இந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றி ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘நிலங்களை அளந்து, கிராமத்திற்கு சொந்தமான நிலம் என்றால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ‘இந்த இடம் எங்களது முன்னோர்கள் கோயில் கட்டுவதற்காகவும், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் என ஒதுக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்ததால் தடுத்து நிறுத்தினோம். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை காலை 9 மணிக்கு முடிவு: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு ேபாலீஸ் பாதுகாப்பு



  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



  • ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி



  • கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்



  • கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]