இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஜூலை 11ல் முற்றுகை போராட்டம் நெடுவாசல் போராட்டக்குழு முடிவு

6/26/2017 3:03:27 PM
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாஜ வேட்பாளர் தமிழிசை? வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு: குமரியில் 2 வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

ஆலங்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி பொதுமக்கள் துவங்கினர். 75 நாட்களாக போராடியும் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் போராட்டத்தை தீவிரப்படுத்த, நெடுவாசல் உள்ளிட்ட 70 கிராம மக்கள், முக்கிய பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் தலைமையில் நேற்று மாலை நடந்தது. எம்எல்ஏ மெய்யநாதன், முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம், முன்னாள் எம்எல்ஏ ராஜ சேகரன், டைரக்டர் கவுதமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செங்கோடன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிவேலு, நடிகர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  70 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட்டது.

வலிமையான போராட்டத்தை முன்னெடுத்துசெல்லும் நோக்கில் 31 பேர் கொண்ட உயர்மட்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. போராட்டத்தை உயர் மட்டக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து நடத்துவது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இப்பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் ஜூலை 11ம் தேதி காலை 7 மணி முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டைரக்டர் கவுதமன் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து பிரச்னைகளுக்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

வரும் ஜூலை  11ம் தேதி நடைபெற உள்ள கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்துக்குப்பிறகும், இத்திட்டம் ரத்துசெய்யப்படா விட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார். இன்று 76வது நாளாக போராடடம் நீடித்துள்ளது. நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் போராட்டத்தில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாஜ வேட்பாளர் தமிழிசை?



  • வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு: குமரியில் 2 வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்



  • வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது



  • ஓகி புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 300 பேர் மாயம்: கப்பல்படை மூலம் தேடும் பணி தீவிரம்



  • திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது



  • ஓங்கி அடித்த ஓகி புயல்: வெள்ளக்காடாக மாறியது குமரி: மழை பலி எண்ணிக்கை 5 ஆனது



  • ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றது: தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை



  • அதிக பெண் நீதிபதிகள் கொண்ட நீதிமன்றமானது ஐகோர்ட் புதிய நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவியேற்றனர்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்: மருதுகணேஷ் நாளை வேட்புமனு தாக்கல்



  • திமுக வேட்பாளருக்கு பிரசாரம்: சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]