இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகலம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

6/26/2017 3:01:27 PM
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாஜ வேட்பாளர் தமிழிசை? வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு: குமரியில் 2 வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

சென்னை : உலக முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு, மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள்.  நோன்பு நிறைவடைந்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இதன்படி இந்தாண்டு ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. தமிழகத்தில் பல  மாவட்டங்களில் பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று  அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

திருவல்லிக்கேணி மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதுபோல் ராயப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இதனால் மசூதிகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இறைவனை தொழுதுவிட்டு தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாகவும் தொலைபேசியில் தெரிவித்தனர். திருவள்ளூர்; திருவள்ளூர் டோல்கேட் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது. திருவள்ளூர் நகரில் வசிக்கும் முஸ்லிம் மக்கள், புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: பாஜ வேட்பாளர் தமிழிசை?



  • வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு: குமரியில் 2 வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்



  • வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது



  • ஓகி புயலில் சிக்கிய குமரி மீனவர்கள் 300 பேர் மாயம்: கப்பல்படை மூலம் தேடும் பணி தீவிரம்



  • திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது



  • ஓங்கி அடித்த ஓகி புயல்: வெள்ளக்காடாக மாறியது குமரி: மழை பலி எண்ணிக்கை 5 ஆனது



  • ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றது: தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை



  • அதிக பெண் நீதிபதிகள் கொண்ட நீதிமன்றமானது ஐகோர்ட் புதிய நீதிபதிகளாக 6 பேர் இன்று பதவியேற்றனர்



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்: மருதுகணேஷ் நாளை வேட்புமனு தாக்கல்



  • திமுக வேட்பாளருக்கு பிரசாரம்: சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]