இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 100 ஆடுகள் மடிந்தன: விவசாயிகள் அதிர்ச்சி

6/23/2017 3:27:41 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 100 ஆடுகள் மடிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எங்களுக்கு நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்து நெல்லி கிராமம் உள்ளது. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள். ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 20 ஆடுகள் முதல் 100 ஆடுகள் உள்ளது. காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மாலையில் விவசாயிகள் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், விவசாயிகளின் ஆடுகள், அவ்வப்போது இறந்தன. விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று ஒரு விவசாயியின் 15 ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இதுவரை இறந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பீதியடைந்தனர். இறந்த ஆடுகளை எந்தவித பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்த முடியாது என்பதால் வயல்வெளியில் புதைத்தனர்.

இதுகுறித்து நெல்வாய் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர், முகாமிட்டு ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘புதிய மழை பெய்யும் போது வளரும் புற்களின் மேல் ஒருவித கிருமி உண்டாகிறது. அந்த கிருமியை சாப்பிடும் போது உண்டாகும் நோய்க்கு பெயர்தான் துல்லுமாரி. ஆடுகள், இந்த கிருமி படர்ந்த புற்களை சாப்பிடும் போது இந்த துல்லுமாரி நோய் தாக்கியுள்ளது. அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீர் திடீரென ஆடுகள் இறப்பதால் எங்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இறந்த ஆடுகளுக்கு, தமிழக அரசு  நிவாரணம் வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் சில
  • மதுராந்தகம் அருகே நல்லூரில் ஏரி மதகு உடைந்து நெற்பயிர்கள் நாசம்



  • சசிகலா உறவினர் வீடுகளில் 4வது நாளாக சோதனை பல ஆயிரம் கோடி வெளிநாடுகளில் முதலீடு



  • காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழக கடலோர பகுதிகளில் 5 நாள் பலத்த மழை பெய்யும்



  • சசிகலா உறவினர் வீடு, ஆபீஸ்களில் 3வது நாளாக ரெய்டு : ரூ.1200 கோடி முதலீடு கண்டுபிடிப்பு



  • கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பி.கள் திடீர் பணியிடமாற்றம்



  • டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பரிதாப பலி



  • மணல் கொள்ளை தடுக்க கோரி போராட்டம்: காரணோடை மக்கள் முடிவு



  • திருச்சியில் டாக்டர் சிவக்குமார், இளவரசி சம்பந்தி வீடுகளில் சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் சிக்கின



  • மன்னார்குடி, தஞ்சையில் 2ம் நாளாக ரெய்டு: திவாகரன் கல்லூரியில் ரூ.25 லட்சம் சிக்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]