இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்

6/16/2017 5:07:48 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி: புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தனி நபர் மற்றும் அரசு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு சார்பில் விலங்குகள் வதை தடுப்பு - கால்நடை விற்பனை விதிமுறைகளை மத்திய அரசு திரும்ப பெறுதல் தொடர்பாக தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில்,  மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மே 23ம் தேதி விலங்குகள் வதை தடுப்பு - கால்நடை விற்பனை விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் கால்நடை வளர்ப்போரின் உரிமையை பறிப்பதாகும். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் உணவை உண்ணுவதற்கும், விரும்பும் மதத்தை கடைபிடிப்பதற்கும், விரும்பும் ஆடையை உடுப்பதற்கும் தனி மனித சுதந்திரம் உண்டு.

ஆகவே மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டுக்கறி, ஒட்டகக்கறி, எருமைக்கறி போன்றவைகள் உண்ணக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரெஞ்சு கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்துள்ள புதுச்சேரி மக்கள் அவரவர்கள் உண்ணும் உணவிற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது. புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசாணையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். எனவே, மத்திய அரசின் கால்நடை விற்பனை விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் எம்எல்ஏக்களின் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சில
  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]