இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்

6/15/2017 3:49:33 PM
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீபாவளிக்கு புயல் உருவாக வாய்ப்பு : கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: தமிழகத்தில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம், ஆந்திராவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூட்ரினோ என்பது சூரியன், நட்சத்திரங்களிடம் இருந்து வெளியாகும் துகள். ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த துகள்கள் எதிரே உள்ள பொருட்களை ஊடுருவி செல்லும் தன்மை கொண்டவை. இதை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்நிலையில், நியூட்ரினோ துகளை ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011ல் அனுமதி வழங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. 2.5 கிமீ தூரத்துக்கு சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட இருந்தது.

இதனால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதை எதிர்த்து  போராட்டங்களும் நடைபெற்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்க திட்டமிட்டப்பட்ட இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, ஆய்வகத்தை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகேயுள்ள பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில
  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



  • சீனாவுக்கான இந்திய தூதராக கவுதம் பம்பாவாலே நியமனம்



  • ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு



  • சரியாக உணவு கூட கொடுக்காமல் உயர் அதிகாரிகள் ஓய்வின்றி வாட்டி வதைக்கின்றனர்: ரிசர்வ் படை வீரர் வீடியோவால் சர்ச்சை



  • தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரபத்ரசிங் உறவினர்கள் பாஜவுக்கு தாவல்: காங். அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]