இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

6/15/2017 3:42:51 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

லண்டன்: லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று அதிகாலை 1.16 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 4வது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. அலறல் சத்தம் கேட்டு மற்ற குடியிருப்பில் வசிப்பவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். தீ வேகமாக பரவிய நிலையில், பலர் பத்திரமாக வெளியே ஓடி வந்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள சிலர் மாடியில் இருந்து குதித்தனர்.

10வது மாடியில் வசித்த பெண் ஒருவர் தனது குழந்தையை தூக்கி வீசினார். அதை கீழே நின்றவர் பத்திரமாக பிடித்துக்கொண்டார். இதில், அந்த குழந்தை உயிர் தப்பியது. இந்த தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எரிந்துவரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த  கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என தெரிகிறது. 27 தளங்களும் முழுவதுமாக பற்றி எரிவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கட்டிடம் முழுவதும் தீ பற்றியதால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழுமையாக எரிந்துவிட்டதால் கட்டிடம் உருக்குலைந்து காணப்படுகிறது. தீ  அணைக்கப்பட்ட பின்னர்தான் குடியிருப்பில் இருந்தவர்களின் முழு விவரமும்  தெரியவரும். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சில
  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]