இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சொந்த தொகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை எச்.வசந்தகுமார் எம்எல்ஏ ஆய்வு

6/14/2017 4:18:03 PM
எல்லையில் தொடர்ந்து பாக். வாலாட்டினால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும்: ராணுவ தளபதி எச்சரிக்கை வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நெல்லையை அடுத்த தருவை, பாளையம் கால்வாயில் 2.6 கிமீ தூர்வாரும் பணியை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ எச்.வசந்த்குமார் துவங்கி வைத்து பார்வையிட்டார். செங்களாகுறிச்சி பெரியகுளம் கால்வாய், சிங்கிகுளம் பொன்னாக்குடி கால்வாய், பத்மநேரி சித்தாற்று பாதை, கழுவூர் குளம் உள்ளிட்ட குளங்கள், கால்வாய்கள் அவரது சொந்த பணத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டு உள்ளது. தெற்கு கழுவூர் பெரியகுளம், வடக்கு கழுவூர் பெட்டைக்குளம், இடையன்குளம் ஊராட்சி பச்சை ஆலங்குளம், மாணிக்கன்குளம், கான்சாபுரம் ஊராட்சி நொச்சிக்குளம் ஆகிய குளங்கள், நாகன்குளம், படமைலயார்குளம் ஆகியவற்றின் நீர்வரத்து பாதை சரிசெய்தல் மற்றும் தருவை கிராமத்தில் இருந்து பாளையம் கால்வாய் பிரிவுக்கு உட்பட்ட சுடுகாடு பெரிய மடை பிரிவிலிருந்து பழைய குளம் பிரிவு வரை உள்ள கால்வாய் தூர்வார நெல்லை மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தருவை கிராம பாளையம் கால்வாய் முதல் ரீச் துவங்கும் இடத்திலிருந்து சுமார் 2 கிமீ, 600 மீட்டர் தொலைவில் உள்ள முதல் ரீச் சுத்தம் செய்யும் பணியை வசந்த்குமார் எம்எல்ஏ துவங்கி வைத்தார். இதற்காக தனது சொந்த ெசலவில் புதிய ஜேசிபி இயந்திரம் வாங்கி, விவசாயிகள் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அப்பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வசந்த்குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘’ மக்கள் பயன்பெறும் வகையில் இதுவரை 2 சிறிய குளங்கள், 2 பெரிய குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணிகளை செய்து வருகிறேன். தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கால்வாய்களில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை’ என்றார்.

மேலும் சில
  • மதுரவாயலில் மாணவன் தற்கொலை



  • திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: ஆவடி நாசர் அழைப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை



  • பொய் புகாரில் ஆசிரியர் பணி நீக்கம் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை



  • உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கும் தயார் : வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி



  • தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ அடுத்த காமெடி ஜெ.வை எல்லா அமைச்சர்களும் பார்த்தோம்: அமைச்சர்களின் முரண்பட்ட பேட்டியால் பரபரப்பு



  • நெடுவாசல் போராட்டம் 168வது நாளாக நீடிப்பு



  • ஒப்பந்ததாரர் தற்ெகாலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்துஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் பழனியப்பன் கையெழுத்து



  • கோர்ட்டுக்கு வந்த ஏட்டு திடீர் சாவு : உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]