ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு குட்பை பட்டமளிப்பு விழாவில் கருப்பு கவுன் அணிய தடை: கான்பூர் ஐஐடி அதிரடி
6/14/2017 3:54:34 PM
லக்னோ: பட்டமளிப்பு விழாவின் போது ஆங்கிலேயர் கால நடைமுறையான கருப்பு கவுன் அணிய லக்னோ ஐஐடி தடை விதித்துள்ளது.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள கான்பூரில் ஐஐடி செயல்பட்டு வருகிறது. வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் இங்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது.பட்டமளிப்பு விழா என்றாலே ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்படும் கருப்பு கவுன் அணியும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் பட்டமளிப்பு விழாவில் கருப்பு கவுனுக்கு கான்பூர் ஐஐடி தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கான்பூர் ஐஐடி வெளியிட்டுள்ள உத்தரவில், பாரம்பரிய உடைகளான பைஜாமா, குர்தா ஆகியவற்றை மாணவர்கள் அணிந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கலாம். அவரவர் தேர்வு செய்துள்ள துறைக்கு ஏற்றவாரியாக கழுத்தில் அணியும் ரிப்பன் அணிவிக்கப்படும். பொன் விழா என்பதால் பேராசிரியர்களும் கருப்பு கவுனை தவிர்த்து விட்டு மாறாக தங்க நிறத்திலான நீண்ட கவுனை அணியலாம். ஷூவுக்கு பதிரலாக நமது பாரம்பரியம், கலாச்சாரத்திற்கு ஏற்ற காலணிகளை அணிந்து வரலாம் என்று தெரிவித்துள்ளது.நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.