திருப்போரூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
6/13/2017 5:20:15 PM
திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு மற்றும் திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு தினம் திருப்போரூரில் ேநற்று நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை வகித்தார்.
குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்தல், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி அளித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பேசினார். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதில், பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் கீதா, ரேணுகாம்பாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.