சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா
6/13/2017 5:17:52 PM
சென்னை: மார்ஷல் நேசமணியின் 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் எஸ்.தங்கமுத்து, துணைப் பொதுச்செயலாளர்கள் கு.இளஞ்சேரன், என்.சேதுராமன், டி.வினாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் எஸ்.மூனீஸ்வரன், எஸ்.சத்யா ஆனந்த், எஸ்பிஎஸ் ராஜலிங்கம், நிர்வாகிகள் பி.என்.குமார், ஏ.பஞ்சவர்ணம், எம்.முகமதுஈசாக், எம்.முத்துகுமார், கே.கே.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.