நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிங் நாடார் சென்னையில் கைது
6/13/2017 5:12:52 PM
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிங் நாடார் சென்னையில் துப்பாக்கியுடன் கைதானார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் சியாம்சுந்தர்சிங் என்ற சிங் நாடார்(45). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிங் நாடார் சென்னை வடபழனியில் ஒருவரை மிரட்டியுள்ளார். அந்த புகாரின்பேரில் சிங் நாடாரை வடபழனி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. சிங் நாடாரின் பெயர் சியாம் சுந்தர்சிங் நாடார். அரசியலுக்காக தனது ெபயரை சுருக்கிக் கொண்டார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள இடையன்குளம்.
இவர் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வசித்து வந்தார். கராத்தே செல்வினின் நெருங்கிய கூட்டாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் களக்காடு அருகே உள்ள கீழ தேவநல்லூரைச்சேர்ந்த முன்னாள் யூனியன் கவுன்சிலர் முருகன் என்பவர் அவரது நண்பர் சொத்து பிரச்னை தொடர்பாக சிங் நாடாரை பார்த்து பேச இடையன்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த சிங் நாடார் காரில் முருகனை கடத்திச் சென்று தேவநல்லூர் பஸ்நிலையத்தில் இறக்கி விட்டதோடு அடித்து உதைத்து தரையில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி விட்டு காரில் தப்பினார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் சிங் நாடார் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். சிங் நாடார் மீது ஏற்கனவே முன்னீர்பள்ளம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் சிதம்பரத்தில் 1999ல் கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கொலையிலும் இவர் மீது வழக்கு உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் துப்பாக்கியுடன் தைாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.