இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டெல்லி அருகே துணிகரம் வங்கி சுவரில் துளையிட்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை

6/13/2017 5:10:33 PM
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது ஐ.நா.சபையின் அணு ஆயுத தடைக்கு 50 நாடுகள் ஒப்புதல் : அமெரிக்கா, சீனா எதிர்ப்பு

காஜியாபாத்: வங்கி சுவரில் துளையிட்டு லாக்கர்களில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். டெல்லி அருகே நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி அருகேயுள்ள காஜியாபாத்தின் மோதிநகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் உள்ள 435 லாக்கர்களில் வாடிக்கையாளர்களின் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கி திறக்கப்பட்டது. லாக்கர்கள் உள்ள அறைக்கு கேஷியர் சென்று பார்த்தபோது, 30 லாக்கர்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வங்கி சார்பில், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து ஆய்வு செய்தபோது, வங்கியின் சுவர் சுமார் 2 அடிக்கு அளவுக்கு துளையிடப்பட்டிருந்தது. இதன் வழியாக கொள்ளையர்கள் வங்கிக்கு உள்ளே சென்றது தெரியவந்தது.

வங்கியில் காணாமல் போன நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. நகைகள் கொள்ளைபோனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருடுபோன வங்கிக்கென்று காவலாளி இல்லை. இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அக்கம்பக்கத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லாததால் சுவரை உடைக்கும் சத்தம், அலார சத்தம் யாரும் கேட்கவில்லை. வங்கியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டதுடன், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் சுவரை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • தி.மலையில் பல கோடி மதிப்பு சிலைகள் மீட்பு : சிலை கடத்தல் கும்பல் வேலூர் சிறையில் அடைப்பு



  • மதுவிற்ற 2 பெண்கள் கைது : 80 பாட்டில்கள் பறிமுதல்



  • ரயில்வே அதிகாரி செக்ஸ் டார்ச்சர் பெண் கேங்மேன்கள் பகீர் புகார் : விசாரணை நடத்த உத்தரவு



  • 5 கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு: டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க மனு



  • மனைவி, குழந்தை வெட்டி கொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை: நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்



  • செம்மரக்கட்டை கடத்தல் தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர போலீஸ் நடவடிக்கை



  • அரசு வேலை வாங்கி தருவதாக 1.08 கோடி மோசடி: பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது



  • லண்டன் பெண்ணிடம் 12 லட்சம் : சாமியாரை பிடிக்க தனிப்படை அமைப்பு



  • சிறுமிபலாத்காரம் பிளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் கைது



  • கடன் வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்தவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]