தமிழக அதிகாரிகளை தாக்கிய பசு பாதுகாவலர்கள் 50 பேர் மீது வழக்கு
6/13/2017 5:09:26 PM
ஜெய்ப்பூர்:மாடுகளை ஏற்றிக் கொண்டு தமிழகத்தை நோக்கி வந்த 5 லாரிகள் மீது பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் இருந்து மாடுகளை ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி வந்த லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு அன்று சுமார் 50 பேர் கொண்ட கும்பல் பார்மர் என்ற இடத்தில் 5 லாரிகளை மடக்கியுள்ளனர். அவர்கள் லாரிகளை அடித்து உடைத்து நொறுக்கினர். ஒரு சில வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்பி ககன் தீப் சிங்லா கூறுகையில், அந்த லாரிகள் தமிழக அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் டிரைவர்கள் உரிய ஆதாரங்களையும் வைத்திருந்தனர். நடவடிக்கை எடுக்க தவறிய உள்ளூர் போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தற்போது இந்த விவகாரத்தில் ஒருசிலரை போலீசார் கைது செய்துள்ளனர். சைனா ராம், கமலேஷ் குமார், விக்ரம் குமார், ஜஸ்வந்த் என்பது தெரியவந்துள்ளது.தற்போது இந்த விவகாரம் ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.