இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்

6/13/2017 5:08:06 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவந்த சண்டை கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை அடைந்தது. இந்த போரில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த போரின்போது பலர் காணாமல் போயினர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரின்போது சரணடைந்தவர்களின் நிலைகுறித்து இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதை வலியுறுத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளில் சாலை மறியல், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபரை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர், உறவினர்கள் அடங்கிய போராட்ட குழுவினரை அதிபர் சிறிசேன நேற்று சந்தித்து பேசினார். இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அவர் உறுதியளித்தார். இதுதொடர்பாக  கொழும்பு நகரில் இன்று நடைபெறும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிறிசேன ஆலோசனை நடத்துக்கிறார். இதில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் சில
  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



  • ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]