கொச்சியில் 17ல் மெட்ரோ ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
6/13/2017 5:04:19 PM
திருவனந்தபுரம்: கொச்சி மெட்ரோ ரயில் தொடக்க விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலம் ஆலுவாவில் இருந்து பாலாரிவட்டம் வரை 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் தொடக்க விழா வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்று காலை 11 மணியளவில் ெகாச்சி கலூரில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையாநாயுடு, கேரள முதல்வர் பினராய்விஜயன், கவர்னர் சதாசிவம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.