இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 11 பாக். கைதிகள் விடுவிப்பு

6/13/2017 5:03:26 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

புதுடெல்லி:இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர், எல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளின் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பிலும் இறுக்கமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் காஷ்மீர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மேலும் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவுக்கு அந்நாடு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, பாக். பிரதமர் நவாஸ் ஆகியோர் சந்தித்தனர். அதிகாரப்பூர்வ பேச்சுகள் நடக்காத போதிலும் இருவரும் நட்பு பூர்வமான வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஷாங்காய் மாநாடு முடிந்த இரண்டு தினங்களுக்குள் இந்தியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 11 கைதிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. தண்டனை காலம் முடிந்த பிறகும் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர்கள் 11 பேரை இந்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்திய அதிகாரிகள் மூலம் வாகா எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுக்ககான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் சிறைகளிலும் இந்தியாவைச் சேர்ந்த 152 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57 பேர் தண்டனை காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை அளிக்கும்படி பாகிஸ்தான் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் உறுதி செய்யும் பட்சத்தில் அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளின் உறவில் ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மேலும் சில
  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



  • சுற்றுலா சென்று திரும்பும்போது விபத்து : கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி



  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]