இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கடன் தொல்லை, மனைவி பிரிந்த வேதனை 2 மகள்களுடன் தந்தை தூக்கிட்டு சாவு

6/13/2017 5:02:33 PM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம் சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

திருவொற்றியூர்: மகள்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடன் பிரச்னை, மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. சென்னை மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32).  இவர்களுக்கு 8ம் வகுப்பு படிக்கும் கவிதாலயா (13), 4ம் வகுப்பு படிக்கும் காவியா (10) என்ற மகள்கள் இருந்தனர்.  சங்கருக்கு போதிய வருமானம் இல்லாததால்  மகள்களை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. குடும்ப செலவு, படிப்புக்கு என்று அக்கம்பக்கத்தினரிடம் சங்கர் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் திண்டாடியுள்ளார்.

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் சங்கருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் தம்பதிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆஷா, கோபித்து கொண்டு பக்கத்து தெருவில் வசித்துவரும் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலை 6 மணி அளவில் சங்கரின் மைத்துனர் சுபாஷ், அவரது வீட்டுக்கு வந்தபோது கதவு உள்தாழ்பாள் போடப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை என்றதால் சந்தேகமடைந்த சுபாஷ், பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, சங்கர் மற்றும் 2 மகள்கள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக 2 மகள்களுடன் தந்தை தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • 14 கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர “சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது



  • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு : நாளை நடக்கிறது



  • வேன் மீது பைக் மோதி தூக்கி வீசப்பட்டு : ரோட்டில் விழுந்த வாலிபர்கள் 2 பேர் பஸ்சில் சிக்கி சாவு.



  • 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம்



  • சென்னையில் குழந்தையை கடத்திய சேலம் பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு



  • காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க தமிழக உளவுத்துறை போலீசார் முயற்சி : மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதம்



  • காவல்துறை செயல்பாடு மோசம் : முதல்வருக்கு, கிரண்பேடி கடிதம்



  • செல்போன் பேசியபடி பஸ்சை இயக்கிய டிரைவர் லைசென்ஸ் ரத்து



  • இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை



  • காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை நீட்டிப்பு : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]