விமானத்தில் கடத்த முயன்ற 5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
6/13/2017 4:45:52 PM
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த பைசல் (28) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் கொழும்பு செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரை நிறுத்தி சோதனை யிட்டனர்.அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, அதற்குள் கருப்பு நிற பார்சல் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்த போது, அமெரிக்க டாலர் இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.5 லட்சம். இதையடுத்து பைசல் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பைசலிடம் விசாரணை நடந்து வருகிறது.