நீதிபதி கர்ணன் இன்று ஓய்வு
6/12/2025 5:46:59 PM
புதுடெல்லி:தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார். இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரும் அவர் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் நீதித்துறையில் சலசலப்புகளை ஏற்படுத்தின. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்தது.
மேலும் இந்த வழக்கில் கடந்த மே மாதம் 9ம் தேதி அவருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அவரை கைது செய்ய சென்னை வந்த கொல்கத்தா போலீசார் அவரை கண்டு பிடிக்க முடியாமல் திணறினர். ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவாக இருந்து வரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையில் ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இந்த பரபரப்பான சூழலில் நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.