பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா பயணம்
6/12/2025 5:43:10 PM
புதுடெல்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி ஏற்றார். பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குடியேற்றத்துறையில் எச்1பி விசா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் கொண்டு வந்த பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்க அரசுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்த முயன்று வருகிறது.
இந்த சூழலில் அதிபர் டிரம்பிின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். வருகிற 25 மற்றும் 26ம் தேதிகளில் அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது டிரம்புடன் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.