இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ம.பி.யில் அமைதி திரும்பியது முதல்வர் சவுகான் உண்ணாவிரதத்தை முடித்தார்

6/12/2025 5:40:33 PM
வங்க தேசத்தில் மீண்டும் படகு விபத்து : ரோஹிங்கியா முஸ்லிம்கள் 5 பேர் பலி, 12 பேர் மாயம் டெங்கு பாதிப்பு குறித்து தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

போபால்:மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்பியதையடுத்து முதல்வர் சவுகான் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் விளைப்  பொருட்களுக்கு உரிய விலை வழங்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல்  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 6ம் தேதி, மந்த்சூரில் விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதனை அடக்க போலீசார்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் பலியாயினர்.இதனால் கடந்த 10 நாட்களாக அமைதியற்ற சூழல் நிலவிவந்தது. மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட  வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் சிவராஜ் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.

விவசாயிகளின் பிரதிநிதிகள் 236 குழுவினர் நேற்று முன்தினம் முதல்வர் சவுகானை சந்தித்து  பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்பியுள்ளதாக தெரிவித்த முதல்வர் சவுகான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று  மாலை முடித்துக்கொண்டார். முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோசி கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.

மேலும் சில
  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



  • சுற்றுலா சென்று திரும்பும்போது விபத்து : கால்வாயில் கார் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி



  • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க பால சபா



  • ராகுல் காங்கிரஸ் தலைவரானால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும்



  • இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம்



  • தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை : மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • கருப்பு பணத்தில் எனது பங்கு 15 லட்சம் எங்கே? : பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி பகீர் கடிதம்



  • கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து : மகாராஷ்டிரா அரசு அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]