இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு

6/9/2025 3:30:30 PM
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் மணலூரில் 2 ஆண்டுக்கு முன் எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்டிருந்த அந்த பெண் யார், எந்த ஊர் என தெரியாமல் இருந்தது. நிலுவையில் கிடந்த இந்த வழக்கில் துப்பு துலக்க ஏரல் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் வைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் ஆறுமுகம் (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் மணலூரில் எரிந்து கிடந்த பெண்ணை எனக்கு தெரியாது. ஆனால் கால்வாயில் உறவினர் பெண்ணைத்தான் நாங்கள் கொன்று கிணற்றில் கல்லைக் கட்டி வீசினோம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த உறவினர் சுடலைமுத்து திருப்பூர் அருகே கிணத்துக்கடவில் குடும்பத்துடன் தங்கி இருந்து தும்பு ஆலையில் வேலைபார்த்து வந்தார். அவரது மகள் வெண்ணிலாவும் (17) தந்தையுடன் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், அங்கு வேலை பார்த்த வந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சுடலைமுத்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை மீறி வெண்ணிலா அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சுடலைமுத்து குடும்பத்தினர் இருவரையும் பிரிக்க திட்டமிட்டனர். இதையடுத்து வெண்ணிலாவை தொடர்பு கொண்டு, நாங்கள் முறைப்படி உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். வீட்டுக்கு வரும்படி கூறினர். இதை நம்பி வந்த வெண்ணிலாவை, அங்கிருந்து கால்வாய் கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எடுத்துக்கூறியும், வெண்ணிலா தனது காதலில் உறுதியாக இருந்தார். இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த நானும், எனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து, வெண்ணிலாவை கடத்தி, அவரது வாயில் விஷம் ஊற்றி கொன்றோம். பின்னர் உடலில் கல்லைக் கட்டி ஊருக்கு மேற்கே வல்லக்குளத்தின் நடுவே உள்ள கிணற்றில் வீசிவிட்டோம். மகளை காணாது அதிர்ச்சியடைந்த சுடலைமுத்து செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து வைகுண்டம் போலீசார் கால்வாய் கிராமத்திற்கு சென்றனர். அங்கு ஆறுமுகம் கூறிய கிணற்றில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். நேற்று  மதியம் 1 மணியளவில் கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் எடுக்கப்பட்ட நிலையில் சகதியில் பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கால்வாய் விஏஓ மற்றும் வைகுண்டம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (9ம் தேதி) சம்பவ இடத்திற்கு வந்தவுடன் உடல் கிணற்றில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்.  இறந்து கிடப்பது வெண்ணிலா தானா எனவும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • நடிகர் திலீப்பிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், ஊழியர்கள் மோதல்: வன காப்பாளர் படுகாயம்



  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் இருந்து ரவுடி தப்பி ஓட்டம்



  • சென்னை சென்ட்ரலில் வழிப்பறி செய்த 3 போலீசார் கைது: கொள்ளை பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]