இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

6/7/2025 4:09:17 PM
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொழிலதிபர், அவரது மனைவி, மகன் ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சிதாபூரை சேர்ந்தவர் சுனில் ஜெய்ஸ்வால்(60). தொழிலதிபரான இவர், தனது மகன் ரித்திக்குடன் வெளியே சென்றுவிட்டு  நேற்று இரவு பைக்கில் வீட்டுக்கு வந்தார். ரித்திக் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் திடீரென அவரை  துப்பாக்கியால் சுட்டனர். அருகே இருந்த அவரது தந்தை ஜெய்ஸ்வாலையும் சுட்டனர்.குண்டுகள் பாய்ந்து ரத்தவெள்ளத்தில் இருவரும் சரிந்தனர். சத்தம்கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடிவந்த ஜெய்ஸ்வாலின் மனைவியையும் மர்ம  ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.

இதில், கணவன், மனைவியும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரித்திக்கை அக்கம்பக்கத்தினர் அருகேயுள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த சம்பவம்  நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • நடிகர் திலீப்பிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், ஊழியர்கள் மோதல்: வன காப்பாளர் படுகாயம்



  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் இருந்து ரவுடி தப்பி ஓட்டம்



  • சென்னை சென்ட்ரலில் வழிப்பறி செய்த 3 போலீசார் கைது: கொள்ளை பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]