இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் லாபம் 4 கோடி

6/7/2025 4:06:04 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

ஐதராபாத்: தெலங்கானாவில் ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தி வரும் பெட்ரோல் பங்க்கில் ரூ.4 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.தெலங்கானா மாநிலத்திலுள்ள சன்சல்குடா பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் இருக்கிறது. இது  கடந்த 5 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளின் பெயரில் ஒப்பந்தம் போட்ட சிறைத்துறை,  அந்த பங்க் நிர்வாகம் முழுவதையும் அவர்களிடமே ஒப்படைத்தது.  இதையடுத்து ஆயுள் தண்டனை கைதிகள் பங்க்கை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினத்தோடு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

இந்த பங்க்கில்  45 ஆயுள் தண்டனை கைதிகளும், சிறையிலிருந்து விடுதலையான 16 பேரும் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு 12,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்கள் நன்னடத்தை, ஏழ்மையான குடும்ப சூழல் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு  பெட்ரோல் பங்க்கில் பணிபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பங்க் சிறைக்கு  வெளியில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு, பணி புரியும்  கைதிகளில் யாரும், இதுவரை தப்பித்துச் செல்ல முயற்சிக்கவில்லை.  தவிர பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவு    ம் இது வரை ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை. கைதிகளால்  நடத்தப்படும் சன்சல்குடா பெட்ரோல் நிலையம் நாள்தோறும், 28,000 முதல் 30,000 லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் அதிகம் பெட்ரோல் விற்பனை நடைபெறும் பங்க்குகளில் முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது கைதிகளுக்கு தினசரி  ரூ.110 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இனி இந்தத் தொகை ரூ.250 ஆக அதிகரிக்கச் சிறைச்சாலைகளின்  இயக்குநர் சிங், மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் ஆண்டுதோறும் இந்த பெட்ரோல் பங்க்கில் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுகிறது. இதன்மூலம் சுமார் 4 கோடி ரூபாய் லாபம்  கிடைத்துள்ளது. இந்தத் தொகை, தெலங்கானா சிறைத்துறை மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெலங்கானா சிறைத்துறை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.


மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]