இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கவர்னரை தொகுதிக்குள் விடாதீர்கள் - நாராயணசாமி முதல்வர் வெற்றுக் கூச்சல் போடுகிறார் - கிரண்பேடி: புதுச்சேரியில் உச்சகட்ட மோதல்

6/6/2025 4:03:55 PM
எடப்பாடியிடம் தினகரன் சரண்டர் டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் மீராகுமாருக்கு ஆம் ஆத்மி ஆதரவு?

புதுச்சேரி: புதுவையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. தொகுதிக்குள் கவர்னரை நுழைய விடாதீர்கள் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த கவர்னர் கிரண்பேடி, முதல்வர் வெற்றுக் கூச்சல் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் காங்கிரஸ் அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே நீடித்த பனிப்போர் நகராட்சி ஆணையர் சந்திரசேகர் இடமாற்றல் விவகாரத்தில் வெட்டவெளிச்சமானது. கவர்னரும், முதல்வரும் நேரடியான விமர்சனங்களில் ஈடுபட்டனர். இதனிடையே சென்டாக் முதுநிலை மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடி நேரடியாக தலையிட்டார். இப்பிரச்னை பூதாகரமாக வெடித்தது. ஆட்சி நிர்வாகத்தில் கவர்னர் எல்லைமீறி தலையிடுவதாக குற்றச்சாட்டை ஆளுங்கட்சி தரப்பினர் முன்வைத்தனர். கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுப்பினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டிவிட்டரில் முதல்வருக்கு 32 கேள்விகளை கவர்னர் கிரண்பேடி எழுப்பி இருந்தார். அதில் தான் சிறந்த நிர்வாகியாக இல்லாமல் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென முதல்வர் விரும்புகிறாரா? என்று கேட்டிருந்தார். இதையடுத்து, ஆட்சியாளர்களின் அனுமதியின்றி கவர்னரை அதிகாரிகள் சந்திக்க தடைவிதித்த முதல்வர், தொகுதிக்குள் கவர்னரை நுழைய விடாதீர்கள் என்று எம்எல்ஏக்களை வலியுறுத்தினார். கவர்னர் எல்லை மீறி செயல்பட்டால் அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதற்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் தடாலடியாக பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது வாட்ஸ் அப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முதல்வர் நாராயணசாமி வெற்றுக் கூச்சல் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை ஒருபோதும் தான் பொருட்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ள கவர்னர், அதிகரித்துவரும் கூச்சலால் பணியிலிருந்து பின்வாங்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் திணறி வருகின்றனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் எங்கள் நிலைமை உள்ளது என அவர்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் சில
  • டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் மீராகுமாருக்கு ஆம் ஆத்மி ஆதரவு?



  • ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு 1 லட்சம் நிறுவனங்களின் உரிமம் ரத்து



  • சரக்கு மற்றும் சேவை வரியால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை



  • பீகாரில் லாலு நிதிஷ் மோதல் வலுக்கிறது பாஜவுக்கு எதிரான ஆர்ஜேடி பேரணியில் பங்கேற்க மாட்டோம்



  • புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்



  • நாடாளுமன்றத்தில் நள்ளிரவு கோலாகல விழா நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்: பிரணாப் முகர்ஜி, மோடி துவக்கிவைத்தனர்



  • டெல்லியில் அப்சல் குரு சர்ச்சைக்கு பிறகு மாயமான மாணவர் நஜீப் குறித்து தகவல் அளிப்பவருக்கு B10 லட்சம் சன்மானம் : சிபிஐ அறிவிப்பு



  • இந்தியர்களின் டெபாசிட் சுவிஸ் வங்கிகளில் கிடுகிடு சரிவு : 45 சதவீதம் குறைந்ததாக தகவல்



  • பசு பாதுகாப்பு என்ற பெயரில் 3 ஆண்டுகளில் 23 பேர் கொலை



  • இஸ்ரேல் பயணத்தை தொடர்ந்து ஜூலை 7ம் தேதி ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் மோடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]