இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை

6/6/2025 4:00:59 PM
ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் : ஜெட்லி தகவல் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தஞ்சை: தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தஞ்சை: வடக்கு வாசல் ஏஒய்ஏ நாடார் சாலையில் இன்று புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் வடக்கு வாசல் நான்கு சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் தங்க பிரபாகரன் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் போக்குவரத்து பாதித்தது.

திருவாரூர்: முத்துப்பேட்டை அடுத்த தேவதானம் ஒட்டங்காடு மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த மே 14ம் தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஜூன் 1ம் தேதி டாஸ்மாக் கடையை அகற்றிக்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அன்றும் கடை அகற்றப்படாததால், கிராம மக்கள் பேராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். நேற்று 5வது நாளாக முற்றுகை போராட்டம் நடந்தது. இதனால் கடை திறக்கப்படவில்லை. தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

நாகை: கொள்ளிடம் அடுத்த புத்தூரில் ரயில்பாதை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், புத்தூரில் ஒரு டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், டாஸ்மாக் எதிர்ப்புக் குழுத்தலைவர் சிவக்குமார் தலைமையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க தலைவர் செந்தில், பாரதி, முரளி உள்ளிட்ட 14 பேர் நேற்று டாஸ்மாக் கடையை நோக்கி முற்றுகையிட கோஷமிட்டபடி சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் சில
  • நெடுவாசலில் கிராம மக்கள் 79வது நாளாக போராட்டம்



  • தமிழகம் முழுவதும் 3வது நாளாக விசைத்தறிகள் ஸ்டிரைக்



  • மதுவுக்கு எதிராக ஆவேச போராட்டங்கள் டாஸ்மாக் கடை மீது பெண்கள் கல்வீச்சு



  • ஈவ் டீசிங், மாணவிகளுக்கு செருப்படி இளைஞர்களை கைது செய்ய கோரி பஸ் சிறைபிடிப்பு; சாலை மறியல்



  • பாவனா கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம் நடிகர்கள் திலீப், நாதிர்ஷாவிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை



  • மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 505 உதவி மருத்துவர்கள் சிறப்பு உதவி மருத்துவர்கள் நியமனம்



  • ஜூலை 17 ஜனாதிபதி தேர்தல் காரணமாக போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை ஜூலை 8ம் தேதிக்கு மாற்றம்



  • வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்



  • ஆட்சியை தக்க வைக்கவும் கமிஷன், பேரத்திலும் கவனம் எந்த துறையும் செயல்படவில்லை : மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]