மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது
6/6/2025 3:58:15 PM
நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்1 படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் பால்பாண்டி (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. காயத்ரியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் பால்பாண்டி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி ஆசைவார்த்தை கூறி காயத்ரியை பால்பாண்டி கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து காயத்ரியின் பெற்றோர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி பால்பாண்டியை கைது செய்தனர். காயத்ரியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக பால்பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.