இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

6/5/2025 3:35:06 PM
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்

புதுடெல்லி: தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரத்தை சிபிஎஸ்இ யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும், சீருடை மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. மேலும் பல்வேறு காரணங்களை கூறி மறைமுக கட்டணங்கள், நன்கொடை உள்ளிட்டவற்றையும் தனியார் பள்ளிகள் கறக்கின்றன. எனவே இவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த ஆண்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விபரத்தை சிபிஎஸ்இ யிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சீருடை மற்றும் பாட புத்தகங்களை விற்பனை செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஜ் ஜவடேகர் அளித்த பேட்டியில், தேவையில்லாத கட்டணங்களை தனியார் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம். மறைமுக கட்டணங்கள் வசூலித்துள்ளது தெரியவந்தால் அவற்றை மீண்டும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மறைமுக கட்டணங்கள், தேவையில்லாத நன்கொடைகள் போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விபரத்தை சிபிஎஸ்இயிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளும் அனுப்பி வைத்துள்ள கட்டண பட்டியல் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கட்டண பட்டியலை அனுப்பாத பள்ளிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பட்டியல் அனுப்பாத மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் கட்டணங்களை நிர்ணயிக்க பள்ளிகள் விரும்பினால் ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகி உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.  குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் சட்ட மசோதாவை பல்வேறு மாநிலங்களும் கொண்டு வர விருப்பம் தெரிவித்துள்ன.

இந்த மசோதாவின்படி பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வர சுயநிதி வகுப்புகளுக்கு வசூலித்து கொள்வதற்கு தொடர்பாக விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ன. தற்போது இந்த சட்டத்தை மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விரும்புவதால், மசோதாவின் நகலை அனுப்பி வைக்கும் படி குஜராத் கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசாமாவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் படி குஜராத்தில் உள்ள பள்ளிகள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி, ரூ.250, ரூ.2500, ரூ.25000, ரூ.2.5 லட்சம் வரை பல்வேறு தரத்தில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கல்விதுறையில் தனியார் முதலீடுகள் வளர்ச்சிக்கு உதவும் என்பது உண்மைதான். அதற்காக பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • தென்மேற்கு பருவமழை தொடக்கம் நாடு முழுவதும் சராசரியான மழை பெய்யும்: வானிலை ஆய்வுமையம் தகவல்



  • நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒரே அமைப்பு: மத்திய அரசு அடுத்த அதிரடி



  • ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் லாபம் 4 கோடி



  • திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து



  • 1000 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கு சிபிஐ கோர்ட்டில் லாலு பிரசாத் ஆஜர்



  • மத்திய பிரதேசத்தில் வன்முறை துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பலி: முழு அடைப்புக்கு காங். அழைப்பு



  • அண்ணா தொழிற்சங்க பெயர் பலகை மறைப்பு ஓபிஎஸ் அணியினர் புதிய சங்கம் துவக்கம்



  • மாடு விற்பனை தடைக்கு எதிராக கேரள சட்ட சபையில் தீர்மானம்: சிறப்பு கூட்டம் நாளை நடக்கிறது



  • ராணுவத்தினர் அதிரடி: நாகாலாந்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • 6 மாதங்கள் முடிந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் சூழல் ஏற்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]