ஒரே வருடத்தில் 1000 மாடுகள் இறப்பு
6/5/2025 3:30:14 PM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள தெருக்களில், குப்பை கிடங்குகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை உண்டதில் ஆண்டுக்கு 1000 மாடுகள் வரை உயிரிழப்பதாக மாநில கால்நடைத்துறை நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. குப்பை கிடங்குகளில் வீசப்படும் குப்பைகளில் உணவுப் பொருட்கள், அழுகிய காய் கனிகள், மீந்து போன பழைய உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர்.
இந்தகழிவு பொருட்களை உண்ணும் மாடுகள் பிளாஸ்டிக் பைகளையும் உட்கொள்வதால் உயிரிழக்கின்றன. இப்படி ஆண்டுக்கு ஆயிரம் மாடுகள் உயிரிழப்பதாக உ.பி மாநில கால்நடைத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படித்த உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்பிரச்னைக்கு மிக விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.