இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியதால் சேதம்

6/5/2025 3:29:41 PM
சீரழியும் மின்வாரிய நிர்வாகம் ஊழியர்கள் பகிரங்க புகார் டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜ அமைச்சரின் பாதுகாவலர் மெத்தனத்தால் அரசு மருத்துவமனை ஸ்கேனரில் துப்பாக்கி சிக்கியது. இதனால் ஸ்கேனர் சேதமடைந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் சத்யதேவ் பச்சவுரி. ஹர்டோய் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சத்யதேவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு லக்னோவில் உள்ள அரசு மருத்துவனையான ராம் மனோகர் லோகியா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சத்யதேவை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனை ஊழியரக்ள் அங்குள்ள எம்ஆர்ஐ ஸ்கேனர் அறைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரி தன்னுடன் கொண்டு வந்த குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை உள்ளே கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அதை வெளியில் வைத்து செல்லங்கள் என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அந்த அதிகாரி அதை கேட்காமல் அவர்களுடன் வாக்குவாதம் செய்து விட்டு ஸ்கேனர் அறைக்குள் நுழைந்து சத்யதேவை படுக்கையில் படுக்க வைத்துள்ளார். அப்போது துப்பாக்கி நழுவி ஸ்கேனரில் உள்ள மின்காந்தத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளே சிக்கியது. இதனால் ஸ்கேனர் செயல்பட முடியாமல் பழுதடைந்தது. இந்த ஸ்கேனரின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.5 கோடி என தெரியவந்துள்ளது. தற்போது பழுது நீக்குவதற்கு மட்டும் ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஸ்கேனர் பழுதானதால் அடுத்து வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளர் 20ம் தேதி அறிவிப்பு? அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற தீவிரம்



  • ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு



  • மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்



  • ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு



  • தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்



  • சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்



  • அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி



  • பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு



  • பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும் : நாளை முதல் அமலுக்கு வருகிறது



  • மாடுகளை விற்க கூடாது என உத்தரவு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]